வல்லத்திராகோட்டை  அரசுப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம்,  வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகிக்க, மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் அய்யாவு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆங்கிலத்தின் அவசியம் குறித்தும், தவிர்க்க இயலாத சூழலில் தாங்கிப் பிடிப்பது ஆங்கிலம் என்றும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும், பட்டை தீட்டிக் கொள்ளவும், ஆங்கிலம் இன்றி அமையாதது என்றும், வாய்ப்பு கிடைக்கும்போது அதை கற்று வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக தலைமையாசிரியர், ஆங்கிலத்தை எளிதாக கற்பதற்கு ஏற்றவகையில் சூழலை உருவாக்கித்தரவும், தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாகவும், அதை மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உதவித் தலைமையாசிரியர் குணசேகரன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் சக்தி கணேஷ், வசந்த், கவியரசன், ஜெயினுலாபுதீன், ரமாதேவி ஆகியோர் ஆங்கிலத்தில் பேசி அசத்தினர். ஆங்கில ஆசிரியர்கள் சந்திரசேகர், நிரோஜா, ரம்யபாரதி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். முதுகலை ஆங்கில ஆசிரியர் ஆண்டனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவி சத்யா வரவேற்புரை நல்க, நிரஞ்சனா  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அனுசியா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 − 53 =