வலி மற்றும் நோய்த் தணிப்பு சிகிச்சை மற்றும் இன்பவனம் திறப்பு விழா

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு தரைதளத்தில், அவசர அறுவை அரங்கு அருகில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையத்தினை கல்லூரி முதல்வர் மு.பூவதி இன்று திறந்து வைத்தார்.

இங்கு நோய் முற்றிய நிலையில் உள்ள பக்கவாதம், புற்றுநோய் மற்றும் HIV போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தணிப்பு மற்றும் வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்விழாவில் துணை முதல்வர் கலையரசி, நிலைய முதல்வர் இந்திராணி, மயக்கவியல் இணை பேராசிரியர்கள் மற்றும் துறை இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் நினைவாக இம்மையத்தின் அருகிலேயே பூந்தோட்டம் ஏற்படுத்தி புதிதாக மலர்ச்செடிகள் நடப்பட்டது. இம்மையத்திற்கு நோய் முற்றிய நிலையில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து மனதால் தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள பசுமை நிறைந்த “இன்பவனம்” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 7