புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள்-தொழிலாளர் கட்சி, கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் இணைந்து நடத்தும் உலக பெண்கள் தின விழா புதுக்கோட்டை கற்பக விநாயகர் மஹாலில் (ஜெ.ஜெ மஹால்) வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவில் மாநிலத் துணை பொதுச்செயலாளர் மகேஸ்வரி தலைமையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், கம்பன் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மற்றும் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவி திலகவதி செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் அனைத்து அமைப்புசாராத் தொழிலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.