வருங்கால தமிழகத்தை வழிநடத்துவது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தான் அறந்தாங்கியில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுனையக்காடு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற உள்ள சாலைமேம்பாடு, குளங்கள் தூர்வாருதல், ஊரணிகளை புதுப்பித்தல், பள்ளி சுற்றுசுவர் கட்டுதல் கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதி உள்ளிட்ட பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  சிவ வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர் மெய்யநாதன், 17- லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாததை இந்தியாவில் முன்னோடியாக தமிழகத்தில் காலை உணவு திட்டத்தை தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றும், வருங்கால தமிழகத்தை வழிநடத்துவது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிதான் என்றும் புகழ்ந்து பேசினார்.

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் நாம் உறுதிமொழி ஏற்போம் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்த தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் பேசினார், நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார் மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் அறந்தாங்கி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.