வயதானவர்கள் கடிதம் வாயிலாக ரேஷன் பொருட்கள் பெறலாம் – அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைக்கு செல்ல முடியாத வயதான நபர்கள், கடிதம் வாயிலாக மாற்று நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

 பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், வயதானவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் சிக்கல் உள்ளது என்றார்.

 இதற்கு விளக்கமளித்த அமைச்சர் சக்கரபாணி, பொருட்கள் வாங்க இயலாத வயதானவர்கள் கடிதத்தின் வாயிலாக மாற்று நபர்கள் மூலம் பொருட்களை வாங்கலாம் என்றும், அதற்கென ரேசன் கடை அதிகாரிகளிடம் அனுமதி கடிதம் பெறவேண்டும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 4 =