வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 3 காளைகள், மாடுகளை அழைத்துச் சென்ற 2 பேர்: திருவரங்குளம் அருகே பலி

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டுக்கு சென்ற மூன்று ஜல்லிக்கட்டு காளைகள், காளைகளை அழைத்து வந்த இரண்டு பேர் பலியானார்கள். 14 பேர் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி வன்னியன்விடுதி கிராமத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் விராலிமலையில் இருந்து பங்கேற்று விட்டு திரும்பிய மூன்று காளைகள், காளைகளை வாகனத்தில் அழைத்து வந்த இரண்டு பேர். திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக பலியானார்கள்.

இன்று காலை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் காலை 8 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். எந்தவிதமான அசம்பாவிதம் நடைபெறாமல் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்ற போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் போட்டியில் பங்கேற்றிவிட்டு காளைகள் உடன் மாட்டு உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் அடங்கிய ஆறு பேர் விராலிமலை நோக்கி திருவரங்குளம் அருகே உள்ள புஷ்கரம் காலேஜ் அருகே சென்றபோது பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் மூன்று காளைகளும் வாகனத்தில் வந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள் காயமடைந்தவர்களை உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.

இரண்டு பேர் பலி 14 பேர் படுகாயம்

ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வந்த கொடும்பாளூர் விக்கி (22) மணப்பாறை மணிகண்டன் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியானார்கள். அவர்களுடன் அதே வாகனத்தில் வந்த மீதம் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் பேருந்தில் பயணித்த பத்துக்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் அவர்களும் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3