வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

ஜப்பான் கடல் பரப்புக்கு அருகில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் கடற்படை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை இன்று நவ.18ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தியது. வட கொரியாவின் ஏவுகணை ஜப்பானின் கடல் பகுதிக்கு அருகில் விழுந்தது. அமெரிக்காவின் நில பகுதிகளை தாக்கும் எண்ணத்தில் தான் இந்த சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. வட கொரியா இம்மாதத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனையை தென் கொரிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை சட்டவிரோதமானது மற்றும் பொறுப்பற்ற தன்மை கொண்டது. இதற்கான விலையை வட கொரியா பெறும் என்று என அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக விமர்சித்தன.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் வட கொரியா ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நிலவியது. வடகொரியாவின் செயலுக்கு பல்வேறு எதிர்வினைகள் எழுந்தும் வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையும் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 + = 80