வட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் 15 பேர் உயிரிழப்பு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிப்பு

ராஜஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பாரன் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பல குடிசை வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிசான்கஞ்ச் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும், அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் செல்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மழை வெள்ளத்தால் பல வீடுகளுக்குள் நீர் புகுந்து பான்டு நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கங்கை நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மற்றும் சம்பல் பகுதிகளில் உள்ள 1,170 கிராமங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 1,600 பேர் மீட்கப்பட்டு 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.