வடமாநிலத்திலிருந்து குட்கா கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றுதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் கூடங்களாக மாறிவரும் சுங்கச்சாவடிகளை படிபடிப்யாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  கோவை, வேலூர், கடலூர் ஆகிய மண்டல அளவிலான  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சேலத்தில்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது தலைவர் விக்கிரமராஜா  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்,அனைத்து சுங்கசாவடிகளும் வருவாய் ஈட்டும் தொழில் கூடமாக மாறியுள்ளதாகவும், தமிழகத்தில் படிப்படியாக சுங்கசாவடிகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை வேண்டும் என்றும் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைவாக இருந்தால் மக்களே விரும்பி கட்டணத்தை செலுத்துவார்கள் என்று கருத்து தெரிவித்த அவர்  ஆனால் கட்ட முடியாத அளவிற்கு சுங்கச்சாவடி கட்டணம் அதிகரித்து வசூலிக்கப்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு கட்டணம்  கடை வாடகையாக வசூலிக்கப்படுகிறது .

ஒரே சீரான வாடகை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யப்படும் என்று  அறிவித்துள்ளது. அதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது  அதற்கு மாற்று பொருள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு சிலநபர்கள் குட்கா உள்ளிட்ட பொருட்களை பெரிய லாரிகள் மூலமாக கடத்தி வருகிறார்கள்.கடத்தி வரும் நபர்களை காவல்துறை அதிகாரிகளுக்கு  தெரியும். ஆனால் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.எனவே குட்கா கடத்தி வரும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.