வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை- தென்கொரிய ராணுவம் தகவல்

கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு அதிரடி காட்டும் வகையில் கடந்த வாரம் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16-ந்தேதி தென்கொரியா-ஜப்பான் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதற்காக தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-இயோல், ஜப்பானுக்கு பயணம் செய்து அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த உச்சிமாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. இது குறித்து தென்கொரிய அரசு வெளியிட்ட தகவலின்படி, பியாங்யாங் நகரில் உள்ள சுனான் பகுதியில் இருந்து கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. குறுகிய இலக்கு கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை கிழக்கு கடல் பகுதியில் செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரிய அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 − = 21