வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு ஒத்திகை

சென்னை கொருக்குப்பேட்டை கொடுங்கையூர் நெடுஞ்சாலையில் உள்ள கொருக்குப்பேட்டை  தீயணைப்பு நிலையத்தில் தற்போது வர இருக்கும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு செயல்படும் வேண்டும், தண்ணீர் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் மக்கள் தங்களை எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான செய்முறை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தீயணைப்பு துறை வடசென்னை மாவட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்பேரில் கொருக்குப்பேட்டை நிலைய அலுவலர் பொறுப்பு எ.முனுசாமி தலைமையில் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.

மழைநீர் அதிகளவில் தேங்கும் இடங்கள், வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கினால் வீட்டில் உள்ள சிறிய வாட்டர் கேன், பெரிய தண்ணீர் கேன் மற்றும் பிளாஸ்டிக் டிரம்களை பயன்படுத்தி எவ்வாறு உதவிகள் கிடைப்பதற்கு முன்பாக தங்களை காத்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு நிலைய அலுவலர் முனுசாமி எடுத்துரைத்தார்.

இதுகுறித்து நிலைய அலுவலர் முனுசாமி கூறியதாவது,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவில் மழைநீர் தேங்கும் கொருக்குப்பேட்டை பகுதிகளில் மழைநீர் மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் எப்படி தங்களை காத்து கொள்ள வேண்டும் என பாதுகாப்பு விழிப்புணர்வை கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் ஏற்படுத்தினோம். மேலும் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கொருக்குப்பேட்டை பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.