வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்நிலைகள், கால்வாய்கள் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நிதி ஒதுக்கீடானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக 2022-2023ம் ஆண்டின் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் பருவமழைக்கேற்ப அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் வழிகளான, கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நூறு மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்று வாய்க்கால் மற்றும் வெள்ள நீர் கால்வாய்கள் நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் முக்கிய நீர் வழிகளில் திடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால், வெள்ளம், தொற்றுநோய்கள் பரவுதல், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் போன்றவை ஏற்படுவதை தடுக்க, தூர் வார தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 82 = 85