லட்சுவாக்கம் மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி காத்திருப்பு போராட்டம்: அதிகாரிகள் சமரசம் வீண்!

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாலவாக்கம் ஊராட்சியை சேர்ந்த லட்சுவாக்கம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வீட்டு மனை பட்டா வேண்டி சுமார் 40 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது 15 நாட்களில் வீட்டு மனை பட்டா வழங்குவதாக வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர்.

ஆனால், வீட்டு மனை பட்டா வழங்காததால் இன்று இவர்கள் இங்குள்ள செல்லியம்மன் கோவில் அருகே காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான கண்ணன், வக்கீல் ஜீவா, தண்டலம் ரமேஷ், பெரியபாளையம் அருள் உள்ளிட்ட ஏராளமானோர் கிராம மக்களுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்

இன்று மதியம் ஊத்துக்கோட்டை தனி துணை வட்டாட்சியர் அம்பிகா, கிராம நிர்வாக அதிகாரி ரகு, ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்டோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 88