லட்சியம் கல்விக் குழுமம்; குழந்தைகள் தின விழா

லட்சியம் கல்விக் குழுமம் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் கல்வி மாநாடு நடத்தப்பட்டது.

மழலையர் முதல் 12ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, கையெழுத்துப் போட்டி, ஸ்லோகன் போட்டியில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கு பெற்றது. ஸ்ரீ சாந்தி ஆனந்த் வித்யாலயா திருமுடிவாக்கம், டி.எம்.எம்.எஸ்., அப்பாசாமி, சோ.சாமி பள்ளி மற்றும் புனித ஜோசப் பள்ளி ஆகியோர் விருது பெற்றனர். இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

லட்சியம் குழுமம் மற்றும் சாகாவின் கிட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் படிப்பு செயலியை மாணவர்களுக்கு வழங்கினர். இப்போட்டியில் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர், அனுஷியா டெய்சி எர்னஸ்ட், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலியன் கந்தசாமி, ஆனந்த் மகாலிங்கம் விஞ்ஞானி ஆகியோர் பங்கேற்று பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

முகமது ருஃபியான் என்பவர் வீட்டுக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான தனது அறிவியல் கண்டுபிடிப்பை நிரூபித்தார். பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்கள் சம்பாதிக்க உதவும் பாடத்திட்ட செயல்பாடுகள் மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ரஜினி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 6