ரூ.35 லட்சம் செலவில் 5 உயர்மின் கோபுரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்!!!

ரூபாய் 35 லட்சம் செலவில் 5 உயர்மின் கோபுரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், அகரமேல் மற்றும் மேல்மணம்பேடு ஆகிய ஊராட்சிகளில் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ. 7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 5 உயர்கோபுர மின் விளக்குகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்  மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஆல்பிஜான் வர்கீஸ்ஆகியோர் முன்னிலையில் திறந்துவைத்தார். 

 இந்நிகழ்வின் போது பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேசிங்கு, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்  ஜெயக்குமார், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன்,  மெல்மணம்பெடு ஊராட்சிமன்ற தலைவர் நிறைமதி தங்கராஜ், துணைத் தலைவர் சதாசிவம், திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுகுமார், கதிர், குணா, மாரிமுத்து, ஜிசிசி கருணாநிதி, கந்தபாபு, சிபி பரணிதரன், பிரவீன்குமார், பிரதீப், செர்மன்ராஜ், செந்தில், உதயா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பலர் உடனிருந்தனர்.