ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் – அண்ணாமலை பங்கேற்பு

ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். மாநில துணை தலைவர்கள் நாகராஜன், துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ராணுவ வீரர் கொலை, பாஜக நிர்வாகி தடா பெரியசாமி இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்களை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். உண்ணாவிரதத்தின் நிறைவாக, மாலையில் ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவுச்சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணியிலும் பாஜகவினர் கலந்து கொள்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்துகொள்வதால் அசம்பாவிதங்களை தவிர்க்க கவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 + = 54