ராணி எலிசபெத் மறைவு: தமிழக அரசு இன்று துக்கம் அனுசரிப்பு

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 11ம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ராணி எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தலைமைச்செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேடிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

99 − = 95