ராணிப்பேட்டை ஆற்காடு பெஸ்ட் நியூ லைப் ஷெல்டர் சிறப்பு பள்ளியில் மாவட்ட விளையாட்டுப்போட்டி

ராணிப்பேட்டை ஆற்காடு ஹாசன் புறா பகுதியில் அமைந்துள்ள பெஸ்ட் நியூ லைப் ஷெல்டர் சிறப்பு பள்ளியில் அகில உலக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் தினம் 2022ஐ முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாபு  துவக்கி வைத்தார்.

பெஸ்ட் நியூ லைஃப் ஷெல்டர் சிறப்பு பள்ளி தாளாளர் கேத்ரின் இன்பராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி பள்ளி தாளாளர் பாலாஜி கலந்து கொண்டார். உடற்பயிற்சி ஆசிரியர் பாலகிருஷ்ணன், பிசியோதெரபிசியன் தீப்த்தி ஜெனிபர்,  ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் விஷ்வாஸ் சிறப்பு பள்ளி,  நேசம் சிறப்பு பள்ளி, அரக்கோணம் ஸ்மார்ட் சிறப்பு பள்ளி மற்றும் வொர்த் அறக்கட்டளை இளம் சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய பள்ளி விளையாட்டு வீரர்கள், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 82 = 90