ராஜா முகம்மதுவிற்கு பவள விழா மற்றும் பொது சேவையில் பொன்விழா பாராட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

இந்திய ரெட்கிராஸ் சங்கம் புதுக்கோட்டை மாவட்டம்,கிங் டவுன் ரோட்டரி சங்கம் புதுக்கோட்டை, வாசகர் பேரவை புதுக்கோட்டை, இணைந்து நடத்தக்கூடிய. தமிழ்நாடு அருங்காட்சியகம் துறை முன்னாள் உதவி இயக்குனரும் இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் புதுக்கோட்டை கவுரவ செயலாளருமான முனைவர் ஜெ.ராஜா முகம்மதுவிற்கு பவள விழா மற்றும் பொது சேவையில் பொன்விழா பாராட்டு நவம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

காலை 10 மணிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரில் இருக்கக்கூடிய கிங்டவுன் ரோட்டரி சங்கம் அரங்கில் இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனருமான சீனு சின்னப்பா விழாவிற்கு தலைமை வகிக்கிறார்.கிங்டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கணேஷ்குமார், இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் மத்தியாஸ் ஆகியோர் வரவேற்புரையாற்றுகிறார்கள். விழாவில் மருத்துவர் ராமதாஸ், திலகவதியார் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரசேகரன், சேவியர், தனபதி, மருத்துவர் ஜெயராமன், இப்ராஹிம் பாபு, தமிழ்ச்செல்வன், சையது நாசர், ராஜா தாஜ் முகமது, தயாநிதி, சண்முக பழனியப்பன், அ.லெ.சொக்கலிங்கம், ஆரோக்கியசாமி, சத்தியராம் ராமுகண்ணு, மருத்துவர் கே.எச்.சலீம், ராஜாமுகமது, கருப்பையன், முருகன், சந்திரா ரவீந்திரன், லதா உத்தமன், ராமையா, புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் சாகுல் ஹமீது, கான் அப்துல் கபார்கான், முருகப்பன், நைனா முகமது, கதிரேசன், சவரிமுத்து, அண்ணாமலை, வில்சன் ஆனந்த், மலையாண்டி, ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி,ரோட்டரி முன்னாள் ஆளுநர் கோபால், ராஜேந்திரன், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முஹம்மது, முதல்வர் இஸ்மாயில் மொகைதீன், கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, முத்துநிலவன், சம்பத்குமார், முத்து சீனிவாசன், லியாகத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் முகமது அலி, உள்ளிட்டோர் பாராட்டுரை வழங்க இருக்கின்றனர். விழாவின் நாயகன் முனைவர் ராஜா முகமது ஏற்புரை நிகழ்த்தவுள்ளார். பேராசிரியர் விஸ்வநாதன் நன்றி தெரிவிக்கவுள்ளார். முனைவர் சேதுராமன் விழாவை தொகுத்து வழங்குகிறார் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய ரெட்கிராஸ் சங்கம் புதுக்கோட்டை மாவட்டம்,கிங் டவுன் ரோட்டரி சங்கம் புதுக்கோட்டை, வாசகர் பேரவை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 5