பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையடுத்து ராஜகோபாலபரம் அஞ்சலகம் புதிய முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது. முன்னதாக ராஜகோபாலபரம் மூன்றாம் வீதியில் இயங்கி வந்த இந்த அஞ்சலகமானது பொதுமக்களின் தொடர் கோரிக்கையடுத்து தற்போது இன்று செப்டம்பர் 6ஆம் தேதி முதல் நம்பர் 753, பெரியார் நகர் என்ற புதிய முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது. நிகழ்வில் புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் உமா, உதவி கோட்ட கண்காணிப்பாளர் கந்தசாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் பெரியார் நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளும் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

