ராகுல் காந்தி மீது போலீஸில் புகார்?: வீர் சாவர்கர் பேரன் பகீர்!

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்கரை அவமதிப்பதால் அவர் மீது மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக வீர் சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2017ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து எனது தாத்தாவை அவமதித்து வருகிறார். வீர் சாவர்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால், வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் வீர் சாவர்கரை அவமதித்து வருகிறது.

சமீபத்தில், பழங்குடியின தலைவர் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி ஜன் ஜாதிய கவுரவ் திவஸ் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். ஹிங்கோலியில் நடந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, “அந்தமான் சிறையில் இருந்து, சாவர்கர் ஒரு கடிதம் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அவர் எழுதிய மன்னிப்புக் கடிதம் அது. அந்தக் கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார். பின்னர் வீர் சாவர்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார். சிறையில் இருந்து வந்தபின்னர் அவர் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ராகுல் காந்தி பேச்சு தொடர்ந்து வீர் சாவர்க்கரை அவமதித்து வருவதாக உள்ளது. ஆகவே, போலீஸில் ராகுல் மீது புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு வீர் சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + = 19