ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாடு

மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். அதனால் அவரது பக்கத்தை ‘டுவிட்டர்’ நிறுவனம் முடக்கியது.

தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதை கடுமையாக சாடிய ராகுல் காந்தி,  எங்களின் அரசியல் செயல்பாடுகளுக்குள் தலையிடுகிறது. இந்திய ஜனநாயகத்தையும், கேள்விக்குறியாக்குகிறது எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஏறத்தாழ ஒரு வாரத்திற்குப் பிறகு ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலரின் டுவிட்டர் பக்கமும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் “ சத்யமேவ ஜெயதே” என்ற வாசகம் ஆங்கிலத்தில் டுவிட் செய்யப்பட்டுள்ளது.