யூ டியூப் சேனல்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசிய ‘பப்ஜி’ மதன் தொடர்ந்த வழக்கு: சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ‘பப்ஜி’ மதன் தொடர்ந்த வழக்கில் சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

யூ டியூப் சேனல்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் கடந்த ஜூலை 5-ம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. எனவே என்னை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதன் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்