யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வலிமை படத்தின் ’நாங்க வேற மாரி’ பாடல்

வலிமை படத்தின் ’நாங்க வேற மாரி’ பாடல் வெளியான ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து சாதைன படைத்துள்ளது.

’என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பிடித்த ‘அதாரு அதாரு’ பாடல் ஹிட்டிற்குப்பிறகு, விக்னேஷ் சிவன் அஜித்திற்கு இரண்டாவது முறையாக ’வலிமை’ படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடலை எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு வெளியான இப்பாடல், வெளியான ஒரு நாளிற்குள் யூடியூபில் 1 மில்லியன் லைக்குகளைக் குவித்துள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது.

தற்போது 9 மில்லியன் பார்வைகளைக் கடந்து 10 மில்லியன் பார்வைகளைத் தொடவிருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணி எப்போதும் ரசிகர் மத்தியில் சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்திருக்கிறது அதனை தொடர்ந்து ‘வலிமை’யும் இருப்பதாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.