யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது – அண்ணாமலை ஆவேசம்

தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே, தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து, பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், பிரதமரை அண்மையில் அமைச்சர் உதயநிதி சந்தித்ததை குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றும், யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 + = 62