யானை தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு: அரசின் நிதி உதவியை எம்எல்ஏ வழங்கினார்

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கேபி. முனுசாமி அரசால் வழங்கப்படும் முதற்கட்ட இழப்பீட்டு தொகை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ளார் நேரலகிரி மற்றும் சிகரலபள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சந்திரன் மற்றும் நாகன் ஆகியோரை யானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அசம்பாவிதம் குறித்த தகவல் அறிந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி. முனுசாமி  மருத்துவமனைக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் 4 லட்சம் இழப்பீடு தொகையில் முதல் கட்டமாக 50 ஆயிரத்திற்கு ஆன காசோலையை பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு வழங்கினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் கேபி முனுசாமி அவர்கள். இச்சம்பவம் விரும்பத்தகாத ஒன்று என்றும் வருங்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் அரசு இங்கு உள்ள சூழ்நிலையை புரிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்வின் போது கிருஷ்ணகிரி அதிமுக நகர செயலாளர் கேசவன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் என பலர் உடன் இருந்தனர்.