மோட்டார் சைக்கிள் விபத்தில் சுற்றுலா வழிகாட்டி சாவு – முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்

மாமல்லபுரத்தில் சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் சுற்றுலா வழிகாட்டி விபத்தில் பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரம் வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45) என்பவர் வழிகாட்டியாக இருந்தார். அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி காட்டி முன்னாள் ஜனாதிபதிக்கு இந்தி மொழியில் சரளமாக பேசி விரிவாக எடுத்து கூறி அவரை வியப்பில் ஆழ்த்தினார். மாமல்லபுரம் முழுவதும் சுற்றி பார்த்த பிறகு விடைபெற்று கிளம்பும்போது சுற்றுலா வழிகாட்டி பாலகிருஷ்ணனை அழைத்து ராம்நாத் கோவிந்த் பாராட்டி விட்டு சென்றார்.

இந்த நிலையில் அவர் செவ்வாய் இரவு 7 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து வெண்புருஷத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஐந்துரதம் அருகே செல்லும்போது பன்றி ஒன்று சாலையில் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சிமெண்டு சாலையில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை பரிதாபமாக உயிரிழந்தார். . இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முன்னாள் ஜனாதிபதிக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட வழிகாட்டி சில மணிநேரத்தில் உயிரிழந்த சம்பவம் மாமல்லபுரம் சக சுற்றுலா வழிகாட்டிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 2 =