மைசூரில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பத்து நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை

மைசூரில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பத்து நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்கு கடந்த 24ஆம் தேதி ஆண் நண்பருடன் சென்ற கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மைசூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 + = 33