மே-3 முதல்  திருவனந்தபுரம் – சென்னை இடையே கோவை வழியாக கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடைக் காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்படும் திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06044), திருவனந்தபுரத்தில் இருந்து வரும் மே 3-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை, புதன்கிழமை தோறும் இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு எழும்பூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06043), வரும் மே 4-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை, வியாழக்கிழமைதோறும் மதியம் 2.25 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

செல்லும் வழியில் இந்த ரயில்கள், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − 36 =