மேல்படிப்புக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் திணறிய மாணவிக்கு உதவித்தொகை வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கேசவன் பாளையத்தில் வசிக்கும், ஏழை மாணவி சௌமியா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 563/600 மதிப்பெண் பெற்று, மதுரை மருத்துவக் கல்லூரியில் டாக்டரேட் ஆப் பார்மசிக்கான படிப்பில் சேர மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தது. படிப்பிற்கான கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவியின் பெற்றோர் தவித்தனர்.

இந்நிலையில் மாணவியின் தாயாரும், மாணவியும், பல்வேறு சேவைகளை செய்து வரும், பொதுத்தொழிலாளர் சங்க பொறுப்பாளர் மாணிக்க. அருண்குமார் அலுவலகம் சென்று கல்விக்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர்.

மாணவி சௌமியாவின் உண்மை நிலையை உணர்ந்த மாணிக்க.அருண்குமார் தனது நண்பர்களுக்கு வலைதளம் வாட்ஸ்ஆப் வாயிலாக கோரிக்கை வைத்தார். இதையறிந்த அமராவதி மகிபாலன், ரோட்டரி சங்கத் தலைவர் சக்திமணிகண்டன், தமிழக ஹயர்கூட்ஸ் சங்க தரங்கை தலைவர் கார்த்திகேயன், ராஜி, சதீஷ் ராமலிங்கம், ஆசிரியை மீனாட்சி ரஷ்யா பிரசன்னா, மனோவர்ஷன், ஆதவமித்ரன் மதுமொழி, குட்டியாண்டியூர் செல்வக்குமார், சிங்கப்பூர் கிருஷ்ணன், அனந்தமங்கலம் ராம்குமார் உள்ளிடோர் மாணவியின்  கல்விக்கு நிதி வழங்கினர். திரட்டப்பட்ட ரூ.20 ஆயிரம் நிதியை மாணிக்க.அருண்குமார் மாணவி சௌமியாவிற்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் ராசமாணிக்கம், சந்தனசாமி, மாணவி சௌமியாவிற்கு, பாராட்டு, வாழ்த்து தெரிவித்த நன்கு படித்து ஏழை மக்களுக்கு சேவையாற்றவும், கல்வி உதவித்தொகை பெற காரணமாக இருந்த மாணிக்க. அருண்குமாரையும் வாழ்த்தினர்.

உதவியை பெற்றுக்கொண்ட மாணவியின் தாயார் ஜான்சிராணி உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − 88 =