மேல மைக்கேல் பட்டியில் வனத்து சின்னப்பர் தேவாலய பெருவிழா நடைபெற்றது. இது பற்றி கீழ மைக்கேல்பட்டி தேவாலய பங்கு தந்தை அடைக்கல சாமி கூறியதாவது:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேல மைக்கேல்பட்டி கிராமத்தில், வனத்து சின்னப்பர் தேவாலயம் உள்ளது. காட்டுக் கோயில் என, பொதுமக்களால் அழைக்கப்படும் இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா, கடத்த 22ஆம் தேதி பங்கு தந்தை அடைக்கல சாமி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சிகளை அடுத்து,நேற்று காலை, குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் அன்று இரவு நடைபெற்ற ஆடம்பர தேர் பவனியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பெருந்திருவிழாவை முன்னிட்டு, வனத்து சின்னப்பர் தேவாலய வளாகம், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.