
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கள்பட்டி முதல் மேலநீலிதநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டிலான சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பலவேசம், மேலநீலிதநல்லூர் கிளை கழக செயலாளர் சண்முகப்பாண்டியன் ,ஒன்றிய பிரதிநிதி வெள்ளத்துரை, ஆத்மா, சேர்மன், கணேசன் ,மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டியன், முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளத்துரை ஒப்பந்ததாரர் சண்முகாதேவி, வீரபாண்டியன், அழகியபாண்டியபுரம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.