சென்னை ஆர்.கே.நகர், கொருக்குபேட்டை, நியூ சிகிரிந்தபாளையம் 11வது தெருவில் அமைந்துள்ள மேரி மாதா ஆலயத்தில் 23ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கும், மக்களுக்கும் பா.ஜ., சார்பில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை வடசென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கிருஷ்ணகுமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சதாசிவம், மாவட்ட துணை தலைவர் அருள் முருகன், சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் தேவி, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் கதிர்வேல், மண்டல பொது செயலாளர் அன்பரசன், சித்ரா மற்றும் விழாவை ஏற்பாடு செய்த அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் சதிஷ்குமார், சரவணன், 47 வது வார்டு தலைவர் மற்றும் ஆர்.கே.நகர் மேற்கு மண்டல தலைவர் வீரா உள்பட ஏராளமான நிர்வாகிகளும், மக்களும் கலந்து கொண்டனர்.