மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை யானை அட்டகாசம்

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி மலைப்பாதையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக உணவு, குடிநீர் தேடி இந்த சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வரும் ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் நடமாடி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி இடையே குஞ்சப்பனை வரை உள்ள இச்சாலை குறுகிய அளவில் உள்ளது. இதனிடையே சாலையில் யானை வந்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அச்சமயம் காட்டுயானைகள் உலா வந்தால் தானாகவே வனப்பகுதியினுள் சென்ற பின்னரே வாகன ஓட்டிகள் மீண்டும் சாலையில் வாகனங்களை இயக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

கடந்த ஒரு வாரமாக குஞ்சப்பனை பகுதியில் நடமாடி வந்த ஒற்றை காட்டு யானை நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையில் 3வது கொண்டை ஊசி வளைவில் நாள்தோறும் சந்தைக்கு காய்கறி, மளிகை பொருட்கள் ஏற்றி வந்த மினி வேனை மறித்து வந்தது. மேலும், வேனில் இருந்த மளிகை பொருட்களை எடுத்து சூறையாடியது. தொடர்ந்து வாகனத்தின் கண்ணாடியை உடைக்க முயன்றது.

அப்போது, வாகனத்தை ஓட்டுநர் சாதுரியத்துடன் பின்னோக்கி இயக்கினார். அதன்பின் காட்டுயானை அரை மணி நேரத்திற்கு பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இச்சம்பவம் கோத்தகிரி மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பகல் நேரத்தில் மலைப்பாதையில் நடமாடும் காட்டுயானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 1