மேட்டுப்பாளையம்- உதகமண்டலம் மலை ரெயில் சேவை இன்று ரத்து

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனிடையே நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக ரெயில் வழித்தடத்தில் ஏற்பட்டு உள்ள மண் சரிவால் மேட்டுப்பாளையம்- உதகமண்டலம் இடையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. கல்லூர் ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 2