மேச்சேரி அருகே மனைவி வேறுநபருடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை

மேச்சேரி அருகே மனைவி வேறுநபருடன் சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள அரங்கனூரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி இளங்கோவன் (31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதனிடையே இளங்கோவன் மனைவி, தனது மகளுடன் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இளங்கோவன் மனவேதனை அடைந்துள்ளார். மேலும், தனது மனைவி, குழந்தையை மீட்டு தரும்படி அவர் மேச்சேரி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மனைவி வேறு நபருடன் சென்ற வேதனையில் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளங்கோவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − 89 =