மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பா.ஜனதா, காங்கிரஸ், போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது.

இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இரு மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =