மெகபூபா முப்தி பகல் கனவு காண்கிறார்- பாஜக கடும் தாக்கு

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசை மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், மெகபூபா முப்தி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, மூவர்ணக் கொடியை மாற்றி காவிக் கொடியை தேசியக்கொடியாக விரைவில் மத்திய அரசு மாற்றும் என்று விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், மெகபூபா முப்தியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பாஜக செய்தி தொடர்பாளர் அல்டாப் தாகூர் கூறியதாவது:- முதலில் தேசம், இரண்டாவது கட்சி, மூன்றாவது தன்னைப்பற்றிய எண்ணம் என்பதே பாஜகவின் மந்திரமாகும். மெகபூபா முப்தி மீண்டும் பகல் கனவு காண்கிறார். மூவர்ணக் கொடி என்பது இந்த தேசத்தின் பெருமை. எனவே, பாஜக தேசியக் கொடியை மாற்றும் என்று கூறுவது அறிவிலித்தனமான கருத்து” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 − 64 =