மூன்று மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் திரையரங்குகள் இன்று திறப்பு

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள், மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்படுகிறது.

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்து அதன்படி கடந்த 1ஆம் தேதி வெளியான அறிவிப்பில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி இன்று பிற்பகலில் இருந்து திரைப்படங்களை திரையிட திரையரங்குகள் தயாராக உள்ளன. தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்கள் புதுச்சேரியில் திரையிடப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் ஆங்கிலம், வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பழைய திரைப்படங்களே திரையிடப்படும்,