முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) தேனி பெரியகுளத்தில் காலமானார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) தேனி பெரியகுளத்தில் காலமானார். தாயார் மறைவு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன். மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே. ஒரு முதலமைச்சரைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை. என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே, எல்லாத் துன்பங்களிலிருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக என பதிவிட்டுள்ளார்.