மும்பை புறநகர் ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் அனுமதி

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மும்பை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பையில் புறநகர் ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் சுதந்திர தினம் முதல், இரு தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைவரும் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை பெறும் வகையில் மகாராஷ்டிரா அரசு பிரத்யேக இணையதளத்தை தொடங்கியுள்ளது.