முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

உ.பி.,யில் நேற்று காலமான அம்மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

உ.பி., முதல்வராகவும், ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்த கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று லக்னோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், லக்னோ சென்ற பிரதமர் மோடி அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாம் திறமையான தலைவரை இழந்துவிட்டோம். அவரது கொள்கைகளையும் மற்றும் தீர்மானங்களையும் பின்பற்றி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அவரது கனவை நினைவாக்க எந்த ஒரு வாய்ப்பையும் நாம் நழுவ விடக்கூடாது. அவரது குடும்பத்திற்கு முழு பலத்தையும் தர வேண்டும் என கடவுள் ராமரை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., கவர்னர் ஆனந்திபென்படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கல்யாண் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 87