முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.41லட்சம் பணம், 963 சவரன் தங்கம், 23,960 கிராம் வெள்ளி, ஒரு ஐபோஃன், கணினி, பெண்டிரைவ், ஹார்ட் டிஸ்க், வங்கியில் இருக்கக்கூடிய வங்கி பெட்டக சாவி, ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

61 − = 55