தமிழக அரசு, முந்திரி பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு தோட்ட பயிரான முந்திரியை பயிரிட்ட விவசாயிகள் அவர்கள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காத நிலையில் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது முந்திரி பூக்கள் பூக்கும் பருவத்தில் பெய்த பனிப்பொழிவு அதனைத் தொடர்ந்து கடுமையான வெயில் ஆகியவற்றின் தாக்கத்தால் பூக்கள் அனைத்தும் கருகி காய்பிடிக்கவில்லை. இதனால் முந்திரி விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, முந்திரி பயிர் மூலம் கிடைக்கும் மகசூல் கிடைக்க முடியாமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளின் இழப்பீட்டை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.