முத்துராமலிங்கத் தேவரின் 59வது குருபூஜை: பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தென்மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஒருவார அரசியல் சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் தொடங்கிய சசிகலா, காலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் சென்றார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய வாகனத்தில் மதுரை வந்த சசிகலாவை அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் சென்ற சசிகலா, அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கதேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சசிகலாவுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சசிகலா பயணம் செய்யும் வாகனத்துக்கான அனுமதியை காவல்துறையிடம் இருந்து பெற்றிருந்தார். அதிமுகவை மீட்கப்போவதாக சூளுரையுடன் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள சசிகலா, புதுக்கோட்டை,கந்தர்வக்கோட்டை வழியாக நேற்று தஞ்சாவூருக்கு சென்றார்.அவருக்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் இரு புறமும் நின்று உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

சசிகலாவுக்கு புலிப்படை சார்பில் வரவேற்பு

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்று விட்டு தஞ்சை செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட்டில் புலிப்படை இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பூங்குடி கார்த்திக்ராஜா, அமமுக நகர செயலாளர் தாரணி உதயகுமார் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்த போது எடுத்த படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 5 =