முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, பிப்., 12க்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர்கள் ஆகிய பதவிகளுக்கான போட்டி தேர்வு, வரும் 29ம் தேதி முதல் பிப்., 6 வரை நடத்தப்பட இருந்தது.கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வை பிப்., 12 முதல் 20ம் தேதி வரை முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான விரிவான அட்டவணை, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன் வெளியிடப்படும். தேர்வுக்கான ஹால் டிக்கெட், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தேர்வு அட்டவணை நிர்வாக மற்றும் கொரோனா தொற்று சூழலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =