முதல் பெண் ஆதீனம் திலகவதியார் திருவருள் ஆதீனம் சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 25-ஆம் ஆண்டு குருபூசை விழா அன்னதான விழா

முதல் பெண் ஆதீனமாக திகழ்ந்த திலகவதியார் திருவருள் ஆதீனம் சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 25-ஆம் ஆண்டு குருபூசை விழா ஜீவா நகரிலுள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு தலைமையேற்று குருவழிபாட்டையும் ஆராதனையையும் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் செய்தார். முன்னதாக கே.என்.ஆகாஷ் திருமுறை பாடல்களை பாடினார். நிகழ்வுக்கு, டாக்டர்.எஸ். இராமதாஸ், இராமையா, பேரா. பொ.அண்ணாமலை, இராமுக்கண்ணு, பேரா. எஸ்.விசுவநாதன், டாக்டர்.சி.கோவிந்தராசன், கவிஞர் நிலவை பழனியப்பன், ஜி.எஸ்.தனபதி,ந.புண்ணியமூர்த்தி, கே.செல்வராஜ், வழக்கறிஞர் இராஜா, தா.முரளிதரன், அ.செல்வராஜ், பொறி.ச.கண்ணன், நாடிமுத்து, சோலை பாப்பா பாலசுப்பிரமணியன், அபிராமிநாதன், நல்லமுத்து இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக, அன்னதானம் வழங்கப்பட்டது.