முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று கமல்ஹாசன் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. முதலமைச்சருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படபிடிப்பை ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளேன். பல சவால்களை சந்தித்து படிப்படியாக உயர்ந்து முதலமைச்சரானவர் தான் மு.க.ஸ்டாலின். தன் திறமையால் வளர்ந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. சீன் பை சீன் ஆகதான் செல்ல வேண்டும். இப்போதே கிளைமேக்ஸ்-க்கு செல்லக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.