முதல்வர் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

முதலமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது, வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் விளையாட்டுத்துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைக்க உள்ளோம். ரூ.25 கோடி செலவில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டிகளை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி உள்ளோம். விரைவில் இறுதிப்போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளார். தஞ்சை, செங்கிப்பட்டி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி கொண்டு வருவது தொடர்பான விவரங்களை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 − = 40