முதல்வரான பின் கோட்டையில் முதல்முறையாக தேசியக் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்

ஆட்சி பொறுப்பெற்ற பின்னர் முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அவர் பேருரையாற்றி வருகிறார். சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை கொத்தளம் உட்பட சென்னை நகரின் முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 3,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.